இந்தியாவில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்கி விட்ட நிலையில் 4ஜி சேவை எப்போது என்பது குறித்த தகவலை அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அடுத்த மாதம் முதல் 4ஜி சேவையை பெறலாம் என்றும் 4ஜி சேவையை பயனாளர்களுக்கு வரும் நவம்பர் மாதம் முதல் வழங்க இருப்பதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
மேலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் செயல்பட வேண்டும் என்றும் இவ்வளவு தாமதமாக செயல்படுவது சரியல்ல என்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.