தமிழகத்தில் ஒயிட் போர்டு பேருந்துகளில் மட்டுமே மகளிர்களுக்கு இலவசம் என்ற நிலையில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் அனைத்து வகை பேருந்துகளிலும் குறிப்பாக வெளிமாநில பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசம் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் முதலமைச்சராக ரேவந்த் திரட்டி சமீபத்தில் பதவியேற்றார். அவர் பதவி ஏற்றவுடன் வெளியிட்டுள்ள முதல் அறிவிப்பில் அனைத்து வகை பேருந்துகளிலும் மகளிர்களுக்கு இலவசம் என்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தை போல் ஒயிட் போர்டு என பிரித்து பார்க்காமல் நகர பேருந்துகள் மட்டுமல்லாமல் எக்ஸ்பிரஸ் பேருந்துகள், புறநகர் பேருந்துகள், வெளிமாநில பேருந்துகள் என அனைத்து வகை அரசு பேருந்துகளிலும் மகளிர்கள் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.