இதுவரை உலகில் ஒருநாடுவிட்டு மற்றொரு நாட்டிற்குச் செல்ல விமானம், ,. கப்பல், சேவைகளைப் பயன்படுத்தி வந்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் பேருந்து சேவை அளிக்கப்படவுள்ளது.
அட்வென்சர் ஒவர்லேண்ட் என்ற சுற்றுலா நிறுவனம் குருகிராமில் உள்ளது. இந்நிலையில் புதிய முயற்சியாக டெல்லியில் இருந்து 18 நாடுகள் வழியே 70 நாடுகளைச் சுற்றிக்கொண்உ சுமார் 20, 000 கிமீட்டர் பயணித்து லண்டன் செல்லவுள்ளது. இடையே மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைக் கடந்து இப்பேருந்து செல்லும்.
ஆனால் இதற்காக கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 பயணிகளுக்கு மட்டுமே இதில் அனுமதி என்றும் அனைவரும் தனித்தனியே 10 விசாக்கள் வைத்திருக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்துக்கு பஸ் டூ லண்டன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.