Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு பாதிப்பு

Webdunia
வியாழன், 31 மே 2018 (12:36 IST)
நாடு முழுவதும் 4 மக்களவை தொகுதி மற்றும் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போது வந்து கொண்டிருக்கும் முன்னணி நிலவரம் பாஜகவுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் இல்லை.
 
வரும் 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த இடைத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மொத்தமுள்ள 11 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், மற்றவை ஐந்து தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது. இந்த முடிவுகள் வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
மேலும் ரத்து செய்யப்பட்ட கர்நாடக மாநிலத்தின் ஆர்.ஆர்.நகர் தொகுதியின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் ஆறாவது சுற்று முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முனிரத்னா 32 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். எனவே இந்த தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது
 
நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை இருப்பதால் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து பொதுத்தேர்தலை சந்தித்தால் நிச்சயம் பாஜகவை வீழ்த்தலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments