ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் உள்பட பல சலுகைகள் நிறுத்தப்படுவதாக நேற்று பாராளுமன்றத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த ரயில்வே துறையின் வருவாயை ஈடு கட்டுவதற்காக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்ட சலுகைகளை நிறுத்த போவதாக அவர் தெரிவித்துள்ளார்
மேலும் நோயாளிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடரும் என்றும் 15 சலுகைகள் தவிர மற்ற அனைத்து சலுகைகளும் நிறுத்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்
மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது