Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடிபோதையில் டிரைவர்.. பீச் ரோட்டில் விபத்துக்குள்ளாகி அரபிக்கடலுக்குள் விழுந்ததால் பரபரப்பு.. என்ன நடந்தது?

Advertiesment
மும்பை

Mahendran

, செவ்வாய், 7 அக்டோபர் 2025 (15:04 IST)
மும்பையின் பீச் சாலையில் , நேற்று இரவு பிரஷ்னுகர் பட்டிவாலா என்பவர் ஓட்டிச்சென்ற கார், அதிவேகத்தின் காரணமாக தடுப்புகளை உடைத்துக்கொண்டு அரபிக் கடலில் கவிழ்ந்தது.
 
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மகாராஷ்டிரா பாதுகாப்பு படையினர் மற்றும் ஒரு காவலர் கடலில் குதித்து, காரில் இருந்த பட்டிவாலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது நிலை சீராக உள்ளது.
 
விசாரணையில், கார் ஓட்டுநர் பட்டிவாலா மது அருந்தி இருந்தது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அதிவேகம் மற்றும் குடிபோதையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக, அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
விபத்து நடந்த பகுதி ஆழம் குறைவாக இருந்ததாலும், மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டதாலும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. கார் கடலில் இருந்து அகற்ற தீயணைப்புத் துறையின் உதவி நாடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் 41 பேர் பலியான விவகாரம்.. திடீரென சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!