Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

Advertiesment
Priyanka Gandhi

Prasanth Karthick

, ஞாயிறு, 4 மே 2025 (12:10 IST)

கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி அப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மக்களுக்கு உதவி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வயநாட்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி அவருடைய தொகுதியான வயநாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

அவ்வாறாக நேற்று அவர் கோழிக்கோடு மாவட்டத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது ஈங்காபுலா சாலையில் 2 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதில் ஒரு காரில் குடும்பமாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தார்கள். 

 

இந்த விபத்தைக் கண்டதும் உடனடியாக இறங்கி வந்த பிரியங்கா காந்தி தனது பாதுகாவலர்களை மீட்பு பணியில் ஈடுபடும்படி உத்தரவிட்டதுடன், டாக்டர்களையும் சம்பவ இடத்திற்கு வர ஏற்பாடு செய்துள்ளார். அங்கு அவர்களுக்கு அவசர முதலுதவி செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு பிரியங்கா காந்தி உதவிய இந்த வீடியோவை கேரள காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் ஷேர் செய்துள்ள நிலையில் பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!