முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை செய்து வருவதால் காங்கிரஸ் கட்சியினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிபிஐ மட்டுமின்றி வருமான வரித்துறை அதிகாரிகளும் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு நிலத்தை, தனியாருக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.