சர்வதேச அளவில் குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் நடத்திவந்த கொடூரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதால் சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.
இந்த செயலுக்கு பல நாட்டை சேர்ந்தவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் குரூப் ஒன்றை அமைத்து அதன் மூலம் குழந்தைகளை கடத்தி பாலியல் தொழிலை கட்டாயப்படுத்தி செய்யவைத்துள்ளனர்.
இந்த வாட்ஸ் ஆப் குழுவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, கென்யா, நைஜீயா, மெக்சிகோ, பிரேசில், சீனா, அமெரிக்கா என பல நாடுகளை சேர்ந்தவர்கள் குழந்தைகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 119 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும், இந்த வாட்ஸ் ஆப் குரூப்பின் அட்மினாக செயல்பட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அதில் இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிகில் வர்மா, மேலும் டெல்லி, மாகாராஷ்ராவை சேர்ந்த 4 அட்மின்களையும் கைது செய்துள்ளனர்.
அவர்களது இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.