தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படாது என்றும் காலதாமதமானாலும் தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது
இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது கொரோனா வைரஸ் பாதிப்பு நிச்சயம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் குறையும் என்றும் அது வரை பொறுத்திருந்து ஜூலையில் தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இப்போதைக்கு சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்
ஆனால் அதே நேரத்தில் சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வை ஆன்லைனில் நடத்தவும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து பிளஸ்-2 சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றும் ஆன்லைனில் அல்லது ஜூலை மாதம் வரை பொறுத்திருந்து தேர்வுகளை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது