பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஏற்கனவே ரூபாய் 25 கோடி கொரோனா தடுப்பு நிதி வழங்கி இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது அவர் மேலும் ரூபாய் 3 கோடி மும்பை மாநகராட்சிக்கு அளித்துள்ளார்.
மும்பை மாநகராட்சியில் உள்ள மருத்துவர்களுக்கு தேவையான சாதனங்கள் வாங்கவும் மருத்துவ கருவிகள் வாங்கவும் அவர் இந்த பணத்தை அளித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ரூ.25 கோடி அக்சயகுமார் கொடுத்த நிலையில் தற்போது மேலும் 3 கோடி அவர் கொடுத்துள்ளதால் மொத்தம் ரூ.28 கொடுத்துள்ள அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று அக்ஷய்குமார் மும்பை போலீஸாருக்கு ரூ. 2 கோடியை வழங்கி உதவி உள்ளார். இதன்முலம் அவர் மொத்தம் ரூ. 30 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, டெல்லி போலீஸார் அக்ஷய்குமாருக்கு ஒருடூவீட்டை டெக் செய்து நன்றி தெரிவித்துள்ளனர். அதில், .. மும்பை பவுண்டேசனுக்காக நீங்கள் ரூ.2 கோடி ரூபாய் கொடுத்து உதவியதற்காக மும்பை போலீஸாசர் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்த சேவ் கார்டின் மூலமாக பெண்கள், ஆண்கள் அனைவருக்கும் பாதுக்காப்பாக வாழ வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர்.
I salute @MumbaiPolice headconstables Chandrakant Pendurkar & Sandip Surve, who laid their lives fighting Corona. I have done my duty, I hope you will too. Let’s not forget we are safe and alive because of them