Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இனி பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு – என்னதான் நினைக்கிறது மத்திய அரசு ?

இனி பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு – என்னதான் நினைக்கிறது மத்திய அரசு ?
, புதன், 23 அக்டோபர் 2019 (10:04 IST)
மருத்துவம் மற்றும் பொறியட்ல் படிப்புகளை அடுத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வைக் கொண்டுவர உள்ளது மத்திய அரசு.

மத்திய கடந்த மே மாதம் புதிய  தேசிய கல்விக் கொள்கை வரைவைக் கொண்டுவர உள்ளது. இந்த வரைவில் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்த பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் நாடு முழுவதும் நடந்தது.

இந்நிலையில் சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ’புதியக் கல்விக்கொள்கை வரைவின் படி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை அடுத்து கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அறிவித்திருப்பது மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை..