இந்திய பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் வங்களின் எண்ணிக்கை குறையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வங்கிகள் இணைப்புக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 21 பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றன.
வங்கிகள் இணைப்பால் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 10 முதல் 15 வரையில் குறைக்கப்பட கூடும். வாராக் கடன் பிரச்சனை காரணமாக 2015-16 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ஈட்டிய வருவாய் ரூ.474 கோடி மட்டுமே.
இதற்கு தீர்வு காண ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.