Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு ஏ.சிக்களுக்கு தடை; உள்நாட்டு ஏ.சி வாங்குங்க! – மத்திய அரசு தடாலடி!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (16:45 IST)
இந்தியாவில் தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் மத்திய அரசு தற்போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஏ.சிகளுக்கு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், தற்சார்பு பொருளாதாரத்தை அதிகரிக்கவும் முன்னதாக வாகனங்களுக்கான டயர்கள், டிவி செட், அகர்பத்தி போன்றவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் ஏர்கண்டிஷனர்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஏசிக்களை உள்நாட்டில் இறக்குமதி செய்து விற்பது அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் ஏசி விற்பனைக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை சந்தை மதிப்பு உள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஏசிக்களில் 90% ஏ.சிக்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டு ஏ.சிக்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள தடை சீனாவை வணிக ரீதியாக பாதிக்கும் என்பதோடு, உள்நாட்டு நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments