அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சுகாதார துறைக்கு அதிக நிதி ஒதுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021-2022ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக பெரும் முடக்கத்தை சந்தித்த நிலையில் பொருளாதார ரீதியாக பல சருக்கல்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரியில் அறிவிக்கப்பட உள்ள பட்ஜெட்டில் புதிய சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டில் கொரோனாவால் இந்தியா பெரும் பாதிப்பை கண்டுள்ள நிலையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறையை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் வழக்கத்தை விட சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.