ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகளுக்காக சிறப்பு குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
ரயில்வே துறையை தனியார் மயமாக்க போவதாக மத்திய அரசு அறிவித்ததிலிருந்தே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கின. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத மத்திய அரசு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை தனியார் வசம் ஒப்படைத்தது.
பல்வேறு ரயில் நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் அவற்றை தனியாருக்கு குறிப்பிட்ட கால அளவில் டெண்டருக்கு விடுவதன் மூலம் சீரமைக்க முடியுமென்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பராமரிப்பற்றதாக கண்டறியப்பட்ட 400 ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக 50 ரயில் நிலையங்களும், 150 ரயில்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்காக தனியாக ஒரு சிறப்பு குழுவை அமைத்து டெண்டர் பணிகளை மேலாண்மை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஆறு விமான நிலையங்களை தனியார் மயமாக்க இதுபோலவே சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.