Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் செல்ல டிஜிட்டல் போர்டிங் பாஸ் ! – மத்திய அரசின் புதிய முயற்சி!

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (20:30 IST)
காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் விமான நிலையங்களில் டிஜிட்டல் முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் மற்றும் பல பகுதிகளில் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் முறையில் மாற்றமடைய தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் விமான நிலையங்களிலும் போர்டிங் பாஸ் மற்றும் விமான டிக்கெட் போன்றவற்றை டிஜிட்டல் முறையிலேயே பெறவும், பரிசோதனை செய்யவும் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது ஒருசில விமான நிலையங்களில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படும் இந்த திட்டம் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்த பிறகு அனைத்து விமான நிலையங்களிலும் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

2021ல் அனைத்து விமான நிலையங்களிலும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த டிஜிட்டல் முறையானது நுழைவு வாயில்களில் உள்ள கேமரா அமைப்புகள் மூலம் பயணிகளின் முகத்தை ஸ்கேன் செய்து அனுமதி வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் போர்டிங் பாஸுக்காக மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும், நேரமும் மிச்சம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments