தற்போது 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் 15 வயதுக்கு குறைவானவர்களுக்கு மார்ச் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு சிறுவர் சிறுமிகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியருக்கு மார்ச் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்
இதுவரை 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மூன்று கோடியே 31 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்ட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
12 வயதுக்கு மேற்பட்டவர்கள் வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காகவே மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது