இந்தியாவில் சீன நிறுவனங்கள் மீண்டும் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு சீன செயலிகளும், சீன நிறுவன முதலீடுகளும் தடை செய்யப்பட்டன., இந்நிலையில் சமீபத்தில் சீன நிறுவனங்களுக்கு இந்திய அரசு முதலீடு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
200 க்கும் அதிகமான நிறுவனங்கள் முன்மொழிந்த நிலையில் எதிர்கால வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு 45 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக பேசிக் கொள்ளபட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், 3 ஹாங்காங் நிறுவனங்களுக்கும், 2 ஜப்பான் நிறுவனங்களுக்கும் மட்டுமே அந்நிய நேரடி முதலீட்டில் அனுமதி வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.