இந்தியாவில் மூன்றாவது அலையை எதிர்கொள்ள மாநில அரசுகள் தயாராக இருக்கும்படி மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தமாக 3 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் செலுத்துவதை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ள மத்திய அரசு மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் அபாயம் உள்ளதால் அனைத்து மருத்துவமனைகளிலும் குழந்தைகள் வார்டில் படுக்கைகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள கூறப்பட்டுள்ளது.