உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு இதுகுறித்து மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்த அறிக்கை வெளியிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குரங்கு அம்மை தொடர்பாக மாநில அரசுகள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது
குரங்கு அம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி குரங்கு அம்மை பாதித்த நோயாளிகளுக்காக படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.