Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடத்திட்டங்கள் குறைப்பு; பள்ளி திறப்பு எப்போது? – மத்திய அரசு பதில்!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (13:51 IST)
கொரோனாவால் பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்பட்ட சூழலில் பள்ளிகள் திறப்பு மற்றும் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து மத்திய அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு தாமதமாவதால் பாடத்திட்டங்களை குறைப்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ”தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து பல வேண்டுகோள்கள் எங்களுக்கு வந்துள்ளன. அதன் அடிப்படையில் பள்ளி பாடத்திட்டங்களை குறைப்பது குறித்தும், வரும் கல்வியாண்டில் பள்ளி வேலை நேரத்தை குறைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் முதலில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை குறைப்பதாகவும், படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் குறைப்பதாகவும் தெரிவித்துள்ல அவர் இன்னும் இரண்டு மாதங்களில் பள்ளிகள் திறக்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments