Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா… மத்திய அரசு கடிதம்!

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (16:18 IST)
9 மாநிலங்களில் உள்ள 115 மாவட்டங்களில் கொரோனா வெகுவாக அதிகரித்துள்ளதாக ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தற்போது தினசரி அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 03 ஆயிரத்து 619 ஆக உயர்ந்தது. புதிதாக 2,603 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,388 ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 18,517 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,31,32,140 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,43,091 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 200.61 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களில் உள்ள 115 மாவட்டங்களில் கொரோனா வெகுவாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments