Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனாதிபதிக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு.. அவசர சட்டம் கொண்டு வருகிறதா மத்திய அரசு?

Advertiesment
மத்திய அரசு

Siva

, வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (07:40 IST)
ஜனாதிபதிக்கு காலக்கெடு விதிக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு பதிலடி கொடுக்க, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில், கவர்னர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அளித்த தீர்ப்பு பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இந்த தீர்ப்பை தடுக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக புறப்படுகிறது.
 
இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
’எத்தனை நாட்களுக்குள் மசோதாவை திருப்பி அனுப்புவது அல்லது நிறைவேற்றுவது’ குறித்து காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் சில அம்சங்களை தடுக்கும் வகையில், சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
 
இந்த நிலையில் தான், தமிழக கவர்னர் ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாகவும், அவரது ஆலோசனைகள் இந்த விவகாரத்தில் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!