Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேண்டர் ரீலோடட்... சந்திரயான் 3-க்கு நாள் குறித்த் இஸ்ரோ!

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (14:09 IST)
சந்திரயான் 3 திட்டத்தை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்தரயான் 2,  நிலவின் மேற்பகுதியில் விக்ரம் லேண்டரை தரையிறக்க முயற்சித்த போது நிலவின் 2.1 கி.மீ. தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்டது.  இதன் பின்னர் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் எந்த சேதமும் இல்லாமல் நிலவின் மேற்பகுதியில் சாய்ந்து கிடக்கிறது என கண்டறிந்தனர். 
 
பின்பு விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள பெரும் முயற்சியை மேற்கொண்டு வந்தனர்.  ஆனால் எந்த முயற்சியும் கைக்கொடுக்கவில்லை. லேண்டர் செயல்படாவிட்டாலும் ஆர்பிட்டர் சிறப்பாகவே செயல்ப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது இஸ்ரோ. 
 
ஆம், சந்திரயான் 3 மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப முடிவுசெய்துள்ளனர். இந்த திட்டம் அடுத்த நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும். இம்முறை அனுப்படும் லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், எந்த கடுனமான சூழலிலும் தரையிறங்கும் திறனுடனும் வடிவமைக்கப்பட உள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments