Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (11:58 IST)
மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்நிலையில் இன்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நாளில் அதே இடத்தில் டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்தது. இதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் டெல்லியை நோக்கி படையெடுத்தன.  
 
டெல்லியில் இன்று நாட்டின் 72வது குடியரசு தினவிழா நடைபெற்று வருவதால் மத்திய டெல்லி பகுதிக்குள் பேரணி நடத்தக்கூடாது என போலீஸ் விதித்த நிபந்தனைகளை மீறி டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளை சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் கண்ணீர் புகை குண்டுவீசி கலைக்கப்பட்டுள்ளது. 
 
சிங்கு எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த அந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியத்துடன் நண்பகல் 12மணிக்கு பிறகே டெல்லிக்குள் விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழைய முயற்சித்து குடியரசு தினவிழா நடைபெறுவதற்கு இடையூறாக இருந்ததால் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments