வங்கிகளில் செக் கிளியரிங் 24 மணி நேரமும் நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மாதம் இது அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
24 மணி நேரமும் காசோலை பரிவர்த்தனை செய்யும் வசதி கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் என்னும் வசதி இந்த மாதத்தில் இருந்து 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
விடுமுறை நாளாக இருந்தால் கூட செக் க்ளியரன்ஸ் செய்யப்படும் என்றும் எனவே செக் வழங்குவதற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் தேவையான பணம் இருப்பதை உறுதி செய்து கொண்டு அதன்பின் செக் வழங்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது
மேலும் செக் பவுன்ஸ் ஆனால் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 24 மணி நேரமும் செக் பரிவர்த்தனை வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது அடுத்து வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்