சத்தீஸ்கரில் மாட்டு சாணத்தை மர்ம நபர்கள் திருடி செல்வதாக விவசாயிகள் பலர் புகார் அளித்துள்ளனர்.
சத்தீஸ்கரில் மாட்டு சாணத்தை கொண்டு ராக்கிகள், சிலைகள், பெயர்பலகைகள் போன்ற பொருட்களை உருவாக்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள விவசாயிகளிடம் மாட்டு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு வாங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மர்ம கும்பல் சில விவசாயிகளின் தொழுவங்களில் உள்ள மாட்டு சாணத்தை இரவில் திருடி சென்று விடுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக புகார் அளித்துள்ள இரு விவசாயிகள் இதுவரை சுமார் 100 கிலோ மாட்டு சாணம் திருட்டு போயுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விநோத சம்பவம் சத்தீஸ்கரில் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.