தேர்தல் ஆணைய அதிகாரிகள் காணாமல் போய்விட்டதாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பரவிய நிலையில் நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை, இங்கேதான் இருக்கிறோம் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் பல்வேறு புகார்கள் அளித்தது. மத்திய அரசின் ஒரு அங்கமாக தேர்தல் ஆணையம் பணி செய்து வருகிறது என்றும் மத்திய அரசு சொல்வதைத் தான் தேர்தல் ஆணையம் காது கொடுத்து கேட்கிறது நான் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர்,
அதேபோல் சமூக வலைதளங்களிலும் தேர்தல் ஆணையர் காணாமல் போய்விட்டனர் என மீம்ஸ் பகிரப்பட்டதை அடுத்து அந்த மீம்ஸ்களை நாங்கள் பார்த்தோம் என்றும் நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை இங்கேதான் இருக்கிறோம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்
தேர்தல் ஆணையத்தின் மீது தேவையில்லாத சந்தேகங்களை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் என்றும் வாக்கு சதவீதம் குறித்த சந்தேகத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அடுத்த முறை வெப்ப அலை இல்லாத காலத்தில் தேர்தலை வைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்