பெங்களூருவில் 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பெங்களூருவில் விடுதி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவன் அடிக்கடி வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக அது போல ஒரு வீடியோ எடுக்க பக்கத்து வீட்டில் இருந்து 3 வயது சிறுவன் ஒருவனை அழைத்துச் சென்றுள்ளார். அந்த சிறுவன் வீடியோ எடுக்கும் போது தவறி விழுந்து அடிபட்டுள்ளது. இதனால் சிறுவனின் பெற்றோர் தன்னை திட்டுவார்கள் என அஞ்சிய சிறுவன் அந்த குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர் சிறுவனை மூட்டைக்கட்டி எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். சிறுவனைக் காணாத பெற்றோர் போலிஸில் புகார் கொடுக்க, அவர்கள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் 23 ஆம் தேதி அதியனின் பெற்றோரை தொலைப்பேசியில் அழைத்த நபர் உங்கள் மகனை சிறுவனை ஒப்படைக்க வேண்டுமானால் 15 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்ட, போலிஸார் அந்த செல்போன் நம்பரைக் கண்டுபிடித்து கொலை செய்த சிறுவனைக் கைது செய்துள்ளனர்.
அப்போது சிறுவன் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.