ரயிலில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு மாற்றுத்திறனாளி ஒருவர் விஜய்யின் நண்பன் பட பாணியில் பிரசவம் பார்த்துள்ளார்.
டெல்லியில் இருந்து மத்திய பிரதேசத்திற்குச் சிறப்பு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. பரிதாபாத் என்ற இடத்தைத் தாண்டியபோது, அங்கிருந்த கர்ப்பிணி ஒருவருக்கு வயிற்றில் வலி எடுத்தது.
அப்போது அந்தப் பெட்டியில் பெண்கள் யாரும் இல்லாத நிலையில், அதே பட்டியில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் நான் உதவி செய்ய வேண்டுமா எனக் கேட்டுள்ளார்.
அதற்கு அப்பெண் வேண்டாமெனக் கூறியுள்ளார். இதையடுத்து பெண் மேலும் வலியால் துடித்தார். அதைப்பார்த்த மாற்றுத்திறனாளி நபர் தான் ஒரு டெக்னீசியன் என்பதால் தனது மருத்துவருக்கு வீடியோ கால் செய்து, அவரது அறிவுரைப்படி மருத்துவம் பார்த்துள்ளார்.பின்னர் குழந்தையை தாயிடமிருந்து குழந்தையை எடுக்கும்போது, மதுரா ரயில்நிலையம் வந்துவிட்டது. அங்கிருந்த ரயில்வே பெண் போலீஸார் குழந்தையையும் தாயையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.