மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அமோக ஆதரவு கிடைத்தது. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவருடைய ஒப்புதலையும் பெற்று தற்போது இந்த குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது
இருப்பினும் இந்த குடியுரிமை சட்டத்தை தங்களுடைய மாநிலங்களில் அமல்படுத்த போவதில்லை என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்
இது குறித்து அரசியல் நிபுணர்கள் கருத்து கூறிய போது குடியுரிமையை மாநிலங்கள் வழங்க முடியாது என்றும் மாநில முதல்வர்கள் எதிர்க்கிறார்கள் என்பதால் குடியுரிமை சட்டம் அமலுக்கு வருவதை தடுக்க முடியாது என்றும் ஒரு மாநிலத்தில் குடியுரிமை வேண்டுபவர்கள் மத்திய அரசிடம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விண்ணப்பித்தால் அவர்களுக்கு இருந்தால் குடியுரிமை கிடைத்துவிடும் என்றும் இதனை ஒரு மாநில அரசோ மாநில முதல்வர் தடுக்க முடியாது என்றும் கருத்து கூறி வருகின்றனர்
இதனை அடுத்து மாநில முதல்வர்கள் எதிர்த்தாலும் அது பெயரளவிற்கு தான் இருக்கும் என்றும் குடியுரிமைக்கு தகுதியுள்ளவர்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது இதனால் மாநில முதல்வர்களின் எதிர்ப்பு என்பது அரசியல் ரீதியாக மட்டுமே இருக்கும் என்றும் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் கூறுகின்றனர்