வட மாநிலம் ஒன்றில் தன்னை அடித்த பெண்ணின் செருப்பை பாம்பு ஒன்று தூக்கிக் கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் விலங்குகள், பறவைகள் போல பல பகுதிகளிலும் வசித்து வருபவை பாம்புகள். நிலம், நீர் என இரு வாழ்விகளான பாம்புகளில் விஷம் நிறைந்த பாம்புகளும் உண்டு. இந்தியாவில் நாக பாம்பு, ராஜநாகம், கண்ணாடி வீரியன், கட்டு வீரியன் உள்ளிட்ட சில வகை பாம்புகள் ஆட்கொல்லும் விஷமுடையவையாக உள்ளன.
பாம்புகள் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்துவிடுவது தற்செயலான தொடர்கதையாக உள்ளது. அப்படியாக ஒரு பெண் வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைய முயன்றுள்ளது, இந்த சம்பவம் நடந்த இடம் தெரியவில்லை. ஆனால் அந்த வீட்டு பெண் வாசலில் வந்த பாம்பை விரட்ட தனது செருப்பை அதன்மீது வீசியுள்ளார்,
உடனே செருப்பை கவ்விக் கொண்ட பாம்பு தலையை மேலே தூக்கிக் கொண்டு செருப்பை ஆட்டியபடியே வேகமாக சென்று புதருக்குள் மறைந்துவிட்டது. பாம்பு செருப்பை கொண்டு சென்ற விதம் அது செருப்பு கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளி செல்வது போல உள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி ப்ரவீன் கஸ்வான் வெளியிட்டுள்ள நிலையில் வைரலாகியுள்ளது.