திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தங்க கொடிமரம் சேதம் அடைந்துள்ளது. அடுத்து ஆட்சியாளர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், தங்கக் கொடிமரம் சேதம் அடைந்துள்ளதை பார்த்து, கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேதத்தை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெறும் என்பதும், அந்த வகையில் இன்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் திடீரென கொடிமரம் சேதம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல், பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை 5.45 மணி, கொடி ஏற்றத்துடன் பிரமோற்சவ நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், கொடி மரத்தின் சேதத்தை சரி செய்து வருவதாகவும் இன்னும் சில நிமிடங்களில் கொடிமரம் சரி செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்றைய பிரமோற்சவம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிலையில், கொடிமரம் சேதம் குறித்து தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை எடுத்து அரசுக்கு ஆபத்தா? லட்டு விவகாரத்தால் ஏற்பட்ட சாபமா என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.