மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் அவரது ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்
இதனை அடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே சமீபத்தில் ஏற்பட்ட முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது
ஏக்நாத் ஷிண்டே தனது பெரும்பான்மையை நிரூபிக்க 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் போதுமான எம்.எல்.ஏக்கள் தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது