Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோட்டாவுக்கு கீழ் குறைந்த சதவீத வாக்கு வாங்கிய காங்கிரஸ்.. சிக்கிமில் படுதோல்வி..!

Siva
ஞாயிறு, 2 ஜூன் 2024 (17:03 IST)
சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை காங்கிரஸ் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்ற நிலையில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில், 31 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா என்ற மாநில கட்சியும், 1 இடத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து சிக்கிமில் மீண்டும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சி அமைக்கிறது.

இம்மாநிலத்தில் நோட்டாவுக்கு 0.99% வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு 0.32% வாக்குகளும், பாஜகவுக்கு 5.18% வாக்குகள் கிடைத்துள்ளது என்பதும், நோட்டாவை விட காங்கிரஸ் கட்சிக்கு 0.67 சதவீதம் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளில் 10 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள மீதமுள்ள 50 தொகுதிகளில் பாஜக 44 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments