Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியல்:

Advertiesment
காங்கிரஸ்
, ஞாயிறு, 17 மார்ச் 2019 (06:44 IST)
நாடாளுமன்ற தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் ஒருசில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் அமேதி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் 27 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியல் வெளியாகியுள்ளது. அருணாச்சலபிரதேசம், சண்டிகர், கேரளா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார். பத்தினம்திட்டா தொகுதியில் தற்போதைய காங்கிரஸ் எம்பி அந்தோணியும், பாலக்காடு தொகுதியில் ஸ்ரீகந்தனும், கோழிக்கோடு தொகுதியில் ராகவனும், கண்ணூர் தொகுதியில் சுதாகரனும், திருச்சூர் தொகுதியில் பிரதாபனும் எர்ணாகுளம் தொகுதியில் ஹிபி எடனும், இடுக்கி தொகுதியில் டீன் குரிகோஸ் என்பவரும் போட்டியிடுகின்றனர், 
 
அதேபோல் உபி மாநிலத்தில் ஹரிந்தர் மாலிக், இந்திரா, ஓம் பிரகாஷ் ஷர்மா, அர்விந்த்சிங் செளஹான், பிரிஜேந்தர்சிங், பாலகிருஷ்ண செளஹான் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 
 
காங்கிரஸ் கட்சியின் அடுத்த பட்டியலில் தமிழகத்தில் 9 தொகுதிகளுக்கும் புதுச்சேரி தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
காங்கிரஸ்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நரேந்திர மோதியை ஹிட்லருடன் ஒப்பிட்ட காங்கிரஸ் தலைவர்