Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளைஞர்களின் டி ஷர்ட்டில் பிரியங்கா – சீருடையில் தொண்டர் படை!

Advertiesment
பிரியங்கா காந்தி
, திங்கள், 11 பிப்ரவரி 2019 (17:19 IST)
காங்கிரஸ் கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக பிங்க் நிற சீருடை அணிந்த தொண்டர் படை ஒன்று உருவாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்படட்டார் பிரியங்கா காந்தி. மேலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேரேலி தொகுதியில் அவர் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. பிரியங்கா தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை விரைவில் துவங்க இருக்கிறார். முன்னதாக அவர் லக்னோவில் பேரணி ஒன்றைத் துவக்கி வைக்க அங்கு சென்றிருந்தார்.

அங்கு கூடியிருந்த ஏராளமான தொண்டர்கள் அவருக்கு ஆரவாரமான வரவேற்பு அளித்து வரவேற்றனர். அதில் ஒருப் பிரிவினர் மட்டும் தனியாக பிங்க் நிற டி ஷர்ட்டை சீருடையாக அணிந்திருந்தனர். மேலும் அந்த டி ஷர்ட்டில் பிரியங்கா காந்தியின் உருவப்படமும் ’பிரியங்காவுடன் களத்தில் நிற்போம். அவருக்கு எங்கள் மரியாதையை செலுத்துகிறோம். தேவையானால் அவருக்கு எங்கள் உயிரையும் கொடுப்போம்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
பிரியங்கா காந்தி

இந்த தொண்டர் படைப் பற்றி விசாரித்த போது ‘நாங்கள் பழையக் குழுவினர்தான். இந்த சீருடை மட்டும் புதியது. எங்கள் ஒழுக்கத்தைக் காட்டவே இந்த சீருடையை அணிந்துள்ளோம். பிரியங்கா காந்திதான் இந்தியாவில் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதியாக உள்ளார். எங்கள் படை பிரியங்கா சேனா என அழைக்கப்படும். இப்போது வரையில் எங்கள் சேனாவில் 500 பேர் உள்ளனர்’ எனத் தெரிவிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏர் இந்தியா விமான பயணம்....மூக்கில், காதில் ரத்தம் ...பயணிகள் அவதி...