விக்ரம் லேண்டர் இன்னும் 11 நாட்களுக்கு மட்டுமே துடிப்புடன் இயங்கும், அதற்குள் சிக்னல் கிடைக்க வேண்டும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ஆகிய 3 பகுதிகளை உள்ள சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இதனை தொடர்ந்து நிலவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது.
அதன் பின்பு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது, நிலவுக்கு 2.1 கி.மீ. தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால், விக்ரம் லேண்டர் தரையிறங்கியதா இல்லையா என்ற சந்தேகத்துடன் இஸ்ரோ செயல்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து சாதுர்யமாக, நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டரின் மூலம், விக்ரம் லேண்டர், நிலவின் திட்டமிடப்பட்ட இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் சாய்ந்து கிடப்பதாக இஸ்ரோ கண்டறிந்தது.
விக்ரம் லேண்டர் எந்த சேதமின்றி இருந்தாலும், அதில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டருக்கு தொடர்பு கொள்ள தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சந்திரயான்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை விகரம் லேண்டரின் நிலை குறைத்து கூறியது பின்வருமாறு, 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கி அடுத்த 14 நாட்கள் செயல்படும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டது விக்ரம் மற்றும் பிரக்யான் விண்கலங்கள்.
நாள் கணக்கின் படி இன்னும் 11 நாட்களுக்கு மட்டுமே விkரம் மற்றும் பிரக்யான் துடிப்புடன் இயங்கும். அதற்குள் விக்ரம் வேண்டருடனான தகவல் தொடர்பை இஸ்ரோ புதுப்பிக்க வேண்டும். ஆனால் நிலவின் மேற்பரப்பில் உள்ள தடைகளால் தகவல் தொடர்பை உருவாக்குவதில் சிக்கல் உள்ளதாக தெரிகிறது என தெரிவித்துள்ளார்.