மத்திய பிரதேச பாஜக பிரமுகர் ஒருவர் இரவு நேரத்தில் நடுரோட்டில் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஜகவை சேர்ந்த மனோகர்லால் தாகத். சமீபத்தில் டெல்லி - மும்பை விரைவு சாலையில் பயணித்த மனோகர்லால் அங்கு இரவு நேரத்தில் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நிர்வாணமாக பெண் ஒருவரோடு உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மனோகர்லால் தாகத் பாஜகவின் எந்த முக்கியமான பொறுப்பிலும் இருப்பவர் அல்ல என மந்த்சூர் மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் ராஜேஷ் தீட்சித் கூறியுள்ளார். ஆனால் மனோகர்லாலின் மனைவி பாஜகவில் இருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மனோகர்லால் தாகத்துடன் நிர்வாணமாக சாலையில் இருந்த அந்த பெண் யார் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K