Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14,000 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம்!

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (10:03 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.  
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,313 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,60,470ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 549 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,57,740 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,543 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,41,175ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,61,555  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி பண்டிக்கைக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள்? போக்குவரத்து துறை முக்கிய ஆலோசனை..!

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி.. 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்..!

56 ஆண்டுக்கு முன் விமான விபத்தில் பலியான இவரது உடல் பனி படர்ந்த இமயமலையில் மீட்கப்பட்டது எப்படி?

மழை பெய்யாமல் இருக்க அகல் விளக்கேற்றி வழிபட்ட விஜய் கட்சி தொண்டர்..!

பள்ளிகள், விமான நிலையம் போரடித்துவிட்டது. பஸ் ஸ்டாண்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments