Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் 30,000 பேருக்கு கொரோனா: மோசமாகும் இந்திய நிலை!

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (10:43 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்து கட்ட ஊரடங்குகளும் முடிந்து விட்ட நிலையிலும் கொரோனா பாதிப்புகள் பல மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 10 லட்சம் பாதிப்புகளை இந்தியா தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 34,884 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 10,03,832லிருந்து 10,38,716 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ,35,757லிருந்து 6,53,751 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,602லிருந்து 26,273 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments