Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நாளுக்கு நாள் குறையும் பாதிப்புகள்! கொரோனாவிலிருந்து மீள்கிறதா இந்தியா? – இன்றைய நிலவரம்!

நாளுக்கு நாள் குறையும் பாதிப்புகள்! கொரோனாவிலிருந்து மீள்கிறதா இந்தியா? – இன்றைய நிலவரம்!
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (09:55 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 66 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 61,267 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 66,85,082 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,03,569 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 56,62,490 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,19,023 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்க்கிங் கட்டணம் குறைவு, மாதாந்திர பாஸ் அறிமுகம்! – சென்னை மெட்ரோ அதிரடி சலுகைகள்!