Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்தியாவில் இன்றைய நிலவரம்!

ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்தியாவில் இன்றைய நிலவரம்!
, செவ்வாய், 8 ஜூன் 2021 (09:22 IST)
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தொட்டிருந்த நிலையில் தற்போது மெல்ல குறைந்து 1 லட்சத்திற்கும் கீழாக உள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 86,498 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,89,96,473 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 2,123 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  3,51,309 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,73,41,462 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 13,03,702 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 23,61,98,726 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டு படத்தை பார்த்தால் சிறை; விற்றால் மரணம்! – பகீர் கிளப்பும் வட கொரியா!