மத்திய அரசு நாட்டில் கொரோனா பாதிப்பு மோசத்தில் இருந்து படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக எச்சரித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 53,480 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,21,49,335 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 354 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,61,843 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,14,34,301 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 5,52,566 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு நாட்டில் கொரோனா பாதிப்பு மோசத்தில் இருந்து படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக எச்சரித்துள்ளது. இதனால் மொத்த நாடுமே பெரும் அபாயத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் இந்தச் சூழலில் மெத்தனம் என்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.