மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கோடி கோடியாக பணத்தை கைப்பற்றிய நிலையில் தற்போது அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி நெருக்கமான நடிகையின் வங்கிக் கணக்கை முடக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில் அமைச்சர் பார்த்தசாரதியின் வீட்டில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் அமைச்சருக்கு நெருக்கமான நடிகை ஒருவரது வீட்டில் இருந்து 29 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதன் மதிப்பு 4 கோடி என்றும் கூறப்பட்டது.
அதன்பின், நடிகையின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை 50 கோடி என்றும் இந்த பணம் முழுவதும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதில் நடந்த ஊழல் இருந்து கிடைத்த பணம் என்றும் அமலாக்கத்துறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகை அர்பிதாவின் வங்கிக் கணக்கில் ஆசிரியர் நியமன ஊழலில் கிடைத்த பணம் ரூ.2 கோடிக்கு மேல் உள்ளதாகவும், அதை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாககவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.