சேர்ந்து வாழ்வதை திருமணம் ஆக அங்கீகரிக்க முடியாது என்றும் அவர்களுக்கு விவாகரத்து என்ற வசதியும் கிடையாது என்றும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஒரு ஜோடி கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்தம் பதிவு செய்து சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு 16 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் தாங்கள் தொடர்ந்து சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் அதனால் தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடினார்.
இதனை அடுத்து அவர்களது திருமணம் முறையாக நடைபெறவில்லை என்பதால் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து இந்த தம்பதிகள் ஐகோட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் நீதிபதிகள் இந்த மனு குறித்த பிறப்பித்த உத்தரவில் சேர்ந்து வாழ்வதை திருமணம் ஆக அங்கீகரிக்க முடியாது என்றும் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து வாழ முடிவெடுத்த ஜோடி அதை திருமணம் என்று கூறவும் அதன் அடிப்படையில் பெறவும் முடியாது என்றும் தெரிவித்தனர்.
ஆனால் அதே நேரத்தில் அந்த குறிப்பிட்ட ஜோடி தங்களுக்கான தீர்வை வேறு இடத்தில் தேடிக் கொள்ளலாம் என்றும், அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது என்றும் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.