Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்த கால இடைவெளி குறைப்பா?

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (14:09 IST)
கோவிஷீல்டு இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தை 8 முதல் 16 வாரமாக குறைக்க பரிந்துரை.

 
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.   
 
இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ்-ஐ செலுத்திய பின்னர் 12 முதல் 16 வாரங்களில் 2வது டோஸ் தற்போது செலுத்தப்படுகிறது. இதனிடையே கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் பெறுவதற்கான கால இடைவெளியை குறைப்பது என தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ளது.
 
அதன்படி கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸை 12 முதல் 16 வாரங்களில் செலுத்தலாம் என்பதை 8 முதல் 16 வாரங்களில் செலுத்தலாம் என்று மாற்றி அமைக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments