கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதை காரணம் காட்டி இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது பார்த்தோம்
குறிப்பாக சென்னையில் பெட்ரோல் விலை 106 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் டீசல் விலை 102 ரூபாயை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் இன்று கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
குறிப்பாக கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைந்து உள்ளதால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
நாளை பெட்ரோல் விலை டீசல் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்