கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துகொண்டே வந்த நிலையில் இன்று ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்திற்கு கச்சா எண்ணெய் விலை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று உயர்ந்துள்ளதாகவும் இன்று கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 6 ஆயிரத்து 700 வரை விற்பனையாகி வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
கச்சா எண்ணெயின் விலை உச்சத்திற்கு சென்றாலும் 5 மாநில தேர்தல் காரணமாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தேர்தல் முடிந்தவுடன் குறைந்தபட்சம் ரூபாய் 10 உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.